“புகை அடங்குமுன் பகை அடக்க வேண்டும்” - வைரமுத்து வேண்டுகோள்

Tamil Nadu Police Vairamuthu
By Thahir Sep 27, 2022 06:15 PM GMT
Report

புகை அடங்குமுன் பகை அடக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தமிழக காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் 

கடந்த 22ம் தேதி கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள், கார், மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது.

இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வைரமுத்து வேண்டுகோள் 

“புகை அடங்குமுன் பகை அடக்க வேண்டும்” - வைரமுத்து வேண்டுகோள் | Vairamuthu Request To The Police

இச்சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், "சீராகச் செல்லும் தமிழ்நாட்டரசின் பயணத்துக்கு ஊறுசெய்யும் யாரையும் சட்டமோ சமூகமோ மன்னிக்காது. புகை அடங்குமுன் பகை அடக்க வேண்டும். 'முள்மரம் முளைவிடும்போதே கிள்ளப்பட வேண்டும்' என்றார் வள்ளுவர். காவல் துறையோர் வள்ளுவர் வழியில் செல்லுவர்" என காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளார்.