4 வருஷமா வேறு பெண்ணுடன் தகாத உறவு; விவாகரத்தும் தரல.. கணவன் குறித்து பிக்பாஸ் பிரபலம்!
பிக்பாஸ் சம்யுக்தா கணவர் குறித்த அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் சம்யுக்தா
பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. துக்ளக் தர்பார், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,
அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவர் கார்த்திக் துபாயில் வேலை பார்த்து வந்தார்.
விவாகரத்து?
அவர் வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருந்தது கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் தெரியவந்தது. அது கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயம் என்பதால் அந்த நேரத்தில் தன்னால் துபாய்க்கு கூட செல்ல முடியாமல் போனது. தன் மகன் அவ்வப்போது அப்பா எங்கனு கேட்கும்போது,
அவர் வேலைல இருக்காரு, அவரால் இந்தியா வர முடியவில்லை என்று சொல்லிவிடுவேன். கணவர் வெளிநாட்டில் இருந்துகொண்டு வர மறுப்பதனால் இதுவரை விவாகரத்து பெற முடியவில்லை. எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தும் அவர் செவி சாய்க்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.