உங்கள் கணவர் அப்பாவி; ஏன் ஏமாற்றுனீர்கள்? ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நச் பதில்!

Samantha Naga Chaitanya
By Swetha Apr 10, 2024 07:30 PM GMT
Report

சமந்தாவின் முன்னாள் கணவரை குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அவர் நாசூக்காக பதில் கொடுத்திருக்கிறார்.

ரசிகரின் கேள்வி

அண்மைகாலமாக நடிகை சமந்தா சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் மையோசிடிஸ் என்ற நோயால் பாதிப்படைந்த பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். இந்த சமயத்தில் தனது உடல்நிலை பற்றி பேச ’டேக் 20’ என்ற பாட்காஸ்ட் ஒன்றை தொடங்கியுள்ளார்.

உங்கள் கணவர் அப்பாவி; ஏன் ஏமாற்றுனீர்கள்? ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நச் பதில்! | Actress Samanthas Reply To Fans

அதில், அவரது நண்பரான ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷூடன் இணைந்து பல டாபிக்கில் பேசி வருகிறார் சமந்தா. இந்நிலையில் தனது காலை நேரத்து ரொட்டீன் குறித்து பேசிய பாட்காஸ்ட் ஒன்று வெளியானது.

தொடரும் சோகம்...மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தா!!

தொடரும் சோகம்...மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தா!!

சமந்தாவின் பதில்

அதில், ரசிகர் ஒருவர், “உங்கள் அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள் என சொல்லுங்கள்” எனக் கமன்ட் செய்திருந்தார். இதற்கு சமந்தா, “மன்னித்து விடுங்கள்! நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என்று நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். வாழ்த்துகள்!” என்று நாசுக்காக பதிலளித்தார்.

உங்கள் கணவர் அப்பாவி; ஏன் ஏமாற்றுனீர்கள்? ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் நச் பதில்! | Actress Samanthas Reply To Fans

மேலும், இது போல கமென்ட்டுக்கு சமந்தா ஏன் பதில் கூற வேண்டும் எனவும் நடந்தது என்ன என்று தெரியாமல் எப்படி இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்றும் சமந்தவுக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் பலர் கமன்ட் செய்துள்ளனர்.