அரசியலில் களமிறங்கும் சமந்தா - வெளியான பரபரப்பு தகவல்!
சமந்தா அரசியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. தற்போது, ஒரு சரியான கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். தொடர்ந்து படங்களில் தோல்வியை தழுவி வந்த நிலையில்
அரசியல் எண்ட்ரி
சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் மெகா ஹிட் அடித்துள்ளது. ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.
தற்போது நடிகை சமந்த பிரேக் முடிந்து வரும் போது அரசியலில் ஈடுபடுவார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொடர்ந்து பிஆர்எஸ் கட்சி சார்பில் சமந்தா தேர்தலில் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம் IBC Tamil