தெரியாம அந்த தப்ப பண்ணிட்டேன்; இப்போ நிறுத்திட்டேன் - நடிகை சமந்தா வேதனை!
நடிகை சமந்தா
தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜுன், நானி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனிடையே நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தனிப்பட்ட காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார். மேலும், பல ஹிட் படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் புதிய படங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஓய்வில் இருந்தார். பின்னர் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு கடந்த ஆண்டு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விழிப்போடு இருக்கிறேன்
இந்நிலையில் சமந்தா உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்து வருகிறார். அந்தர்வாகியில் ‘டேக் 20’ என்ற பெயரில் பாட்காஸ்டில் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைப் பேசி வந்தார்.

அப்போது அவரது வீடியோவுக்கு கீழ் ஒருவர், ‘ஆரோக்கியமற்ற ஐஸ்கிரீம், கூல் டிரிங் போன்ற விளம்பரங்களில் விளம்பர தூதராக சமந்தா நடித்திருக்கிறார்’ என கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, “நான் கடந்த காலத்தில் தெரியாமல் அது போன்ற தவறை செய்துவிட்டேன்.
ஆனால், உண்மை தெரிந்த பிறகு அது போன்று விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்போடு இருக்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று பதிலளித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan