சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது; அதற்கு காரணமே இதுதான் - நடிகை சமந்தா!
இன்றைய உலகில் ஆன்மிகம் அதிகம் தேவைப்பப்படுவதாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.
நடிகை சமந்தா
தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜுன், நானி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனிடையே நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தனிப்பட்ட காரணங்களால் அவரை விவாகரத்து செய்தார்.
மேலும், பல ஹிட் படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் புதிய படங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஓய்வில் இருந்தார். பின்னர் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு கடந்த ஆண்டு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
நோயும், வலியும்
இந்நிலையில், விவாகரத்து மற்றும் மயோசிடிஸ் நோய்க்கு பிறகான வாழ்க்கை குறித்து சமந்தா பேசியுள்ளார். அவர் கூறுகையில் "நம் வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற நாம் அனைவரும் விரும்புகிறோம்.
என்னிடம் இருந்த விஷயங்களை நான் கடந்து வந்திருப்பதை சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பேன். ஆனால், வேறு வழியில்லை. கடந்த 3 ஆண்டுகளில் சில விஷயங்கள் நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். என் நண்பரிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறேன். வாழ்க்கை நமக்கு அனைத்தையும் சமாளிக்க கற்றுத்தருகிறது.
இப்போது நான் வலுவாக இருக்கிறேன். ஆன்மிக ஈடுபாடுதான் அதற்கு காரணம். இன்றைய உலகில் முன்பைவிட ஆன்மிகம் அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில், தற்போது நோயும், வலியும் அதிகமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.