விவாகரத்திற்கு பின் சமந்தாவுக்கு எகிறும் மார்க்கெட், 10 கோடியா? - ஸ்தம்பித்த திரையுலகம்!
நடிகை சமந்தா சிட்டாடல் வெப் தொடரில் நடிப்பதற்காக ரூ.10 கோடி சம்பளமாக வாங்கியதால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சிட்டாடல் வெப் தொடர்
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா, இவர் விவாகரத்திற்கு பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஃபேமிலி மேன் 2 தொடரின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் சிட்டாடல் என்ற வெப் தொடரில், வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த தொடர் ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் என்ற வெப் தொடரின் இந்தி ரீமேக் ஆகும். மேலும், இந்த கதையில் பிளாஷ்பாக் காட்சிகளில் சமந்தா பிரியங்கா சோப்ராவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
இந்த கதாபாத்திரம் ஆக்சன் காட்சிகள் நிறைந்த செம்ம வெயிட்டான கதாபாத்திரம் துன்று கூறப்படுகிறது.
சம்பளம்
இந்நிலையில், சமந்தா தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் நடித்த புஷ்பா திரைப்படத்தில் வெறும் 3 நிமிடம் பாடலுக்கு ரூ.5 கோடி வாங்கியுள்ளார்.
இதனால் திரையுலகமே ஸ்தம்பித்து போனது. மேலும், இவர் ரூ. 4 மற்றும் ரூ.5 கோடி வரை வாங்கிவந்தார். தற்போது இந்த வெப் தொடரில் நடிப்பதற்காக இவர் 10 கோடி வங்கியுள்ளதாக தகாவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆச்சரியத்தில் உறைந்தனர்.