நேரமே சரியில்லை...! அறுவை சிகிச்சை பிரிவில் நடிகை சமந்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை சமந்தா அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அறுவை சிகிச்சை பிரிவில் சமந்தா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் அதற்கான சிகிச்சையை பின்பற்றி நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு அறுவை சிகிச்சை நடக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும்,
இதனால் 6 மாதத்திற்கு எந்த ஒரு படப்பிடிப்பிலும் சமந்தா கலந்து கொள்ள போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.