கனவுல கூட நினைக்கல; அனிருத்தின் அப்பா அப்படி நடந்துப்பாரு - போட்டுடைத்த நடிகை!
இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை குறித்து நடிகை சாதனா பேசியுள்ளார்.
நடிகை சாதனா
நெஞ்சத்தை அள்ளித்தா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாதனா. இதுவரை 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதேபோல் மலையலாம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சாதனா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை குறித்து பேசியுள்ளார்.
அமைதியா இருப்பாரு
அவர் பேசியதாவது "நான் அனிருத்தின் அப்பாவோடு நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவருடைய பையன் இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக வருவார் என்று நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அனிருத்தின் அப்பா மிகவும் அமைதியாக இருப்பார். நான் ஒரு பக்கமா என்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் அவர் ஒரு பக்கமாக அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்பார். ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் பண்ணாத நபர் அனிருத்தின் அப்பா" என்று கூறியுள்ளார்.