என் கணவர் இப்படி இருக்கவே கூடாது - சதா ஸ்ட்ரிக்டா போட்ட கண்டிஷன்!

Sadha Only Kollywood Marriage Relationship
By Sumathi Aug 26, 2022 11:53 AM GMT
Report

நடிகை சதா தனது திருமணம் குறித்தும், திருமணம் செய்யப்போகும் மணமகன் குறித்தும் சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.

நடிகை சதா

தமிழில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகானவர் நடிகை சதா. அந்நியன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். சுமார் 20ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடிகையாக இருந்து வரும் சதாவிற்கு தற்போது வயது 38. பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சதா பணியாற்றி வருகிறார்.

என் கணவர் இப்படி இருக்கவே கூடாது - சதா ஸ்ட்ரிக்டா போட்ட கண்டிஷன்! | Actress Sadha About Her Marriage

இந்நிலையில், தனது வருங்கால கணவர், திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார் சதா. அதில், நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளுங்கள், குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று எனக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

 திருமணம் குறித்து..

என் வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? இப்போதெல்லாம் 10 திருமணங்கள் நடைபெற்றால் அதில் ஐந்து ஜோடிகள் கூட திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருக்கவில்லை.

என் கணவர் இப்படி இருக்கவே கூடாது - சதா ஸ்ட்ரிக்டா போட்ட கண்டிஷன்! | Actress Sadha About Her Marriage

யாரோ என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் நான் நினைக்க வேண்டும்? நமக்காக மற்றவர்கள் எதற்காக உழைக்க வேண்டும்? என் வாழ்க்கையை நான் ஆனந்தமாக கழிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

கணவர் எப்படி இருக்க வேண்டும்?

நான் பார்ட்டி, பப் என செல்வது இல்லை. திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு சந்தோஷமாக இருக்க முடியாது. திருமணம் என்ற பெயரில் மற்றவரை சார்ந்து வாழ்ந்தால் நமது நெருக்கடியையும் அவரே தாங்க வேண்டும்.

ஒரு வேளை நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் மணமகன் எனது சம்பாத்தியத்தை சார்ந்து இருக்கக்கூடாது என கூறியுள்ளார். குறிப்பாக சைவ உணவு உண்பவரையே திருமணம் செய்து கொள்ள சதாவுக்கு விருப்பமாம்.