என்னை திருமணம் செஞ்சிக்கிறீங்களா...? ஆசையா கேட்ட ரசிகர் - பட்டென பதில் சொன்ன நடிகை மீனா

Meena
By Nandhini Aug 20, 2022 01:30 PM GMT
Report
465 Shares

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

வித்யாசாகர் மரணம்

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

பிரபலங்கள் இரங்கல்

மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

actress-meena

ரசிகருக்கு பட்டென பதில் சொன்ன மீனா

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகை மீனா, ரசிகர்களுடன் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நடிகை மீனாவிடம் அவரது ரசிகர்கள் பல கேள்விகளை கேட்கின்றனர். அதற்கு ரொம்ப பொறுமையா நடிகை மீனா பதில் அளித்துள்ளார்.

அப்போது, ஒரு ரசிகர் மீனாவிடம் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்க, அதற்கு மீனாவோ தனது கணவருடனான திருமண போட்டோவை ஷேர் செய்த மீனா, நீங்க கொஞ்சம் லேட் என்று நச்சுன்னு பதிலளித்துள்ளார்.

வேறொரு ரசிகர் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து வந்து உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்க... அதற்கு நடிகை மீனா Awww என்று பதில் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.