மீனாவை கொலை செய்ய துடித்தேன்... - ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகை - ரசிகர்கள் ஷாக்

Meena
By Nandhini 8 மாதங்கள் முன்

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

வித்யாசாகர் மரணம்

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

meena

பிரபலங்கள் இரங்கல்

மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குழந்தை நட்சத்திரம்

நடிகை மீனா எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படம் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதில் இவர் சூப்பர் ஸ்டாரை ‘ரஜினி அங்கிள்... நீங்க எங்க இருக்கீங்க’ என்று அழைக்கும் அந்த டயலாக் ரொம்பவும் பிரபலமானது. அதன் பின்னர் அவர் நடிகையாகி ரஜினி, கமல், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.

நடிகை சோனியா போஸ் பேட்டி

தற்போது, சமூகவலைத்தளங்கள் மீனாவை குறித்து நடிகை சோனியா போஸ் பேசிய பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடிகை சோனியா போஸ், நடிகை மீனா இருவரும் நடித்தனர். இப்படம் குறித்து மனம் திறந்து நடிகை சோனியா போஸ் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அப்பேட்டியில் பேசுகையில் -

நானும், மீனாவும் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தோம். அப்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நான் பல காட்சிகளில் நடித்தேன். ஆனால், படம் வெளியானது பிறகு பார்த்தால் என் காட்சிகள் நிறைய வரவே இல்லை. மீனாவும், ரஜினியும் இணைந்து நடித்த காட்சிகள் தான் நிறைய இருந்தது. இதனால் எனக்கு மீனா மீது ரொம்ப கோபம் வந்தது.

மீனாவை கொலை செய்து விடலாம் கூட எனக்கு தோன்றியது. ஏனென்றால், எனக்கு ‘சூப்பர் ஸ்டார் ரஜினி அங்கிளை’ ரொம்ப பிடிக்கும். அப்படி இருக்கும்போது என் காட்சிகள் எல்லாம் வரவே இல்லை. இதனால், நான் சிறிது நாட்கள் மீனா மீது கோபமாக இருந்தேன் என்று அவர் வெளிப்படையாக சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.

தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு சோனியா இந்த விஷயத்தை கூறியுள்ளதால் ரசிகர்கள் ஷாக்காக வைத்துள்ளது. 

soniya

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.