விஜய் சேதுபதி வேணாம்னு சொன்னாரு.. என் வயசு இதுதான் - 'மகாராஜா' மகள் பளீச்!

Vijay Sethupathi Tamil Cinema Tamil Actors Tamil Actress Maharaja
By Jiyath Jun 16, 2024 01:04 PM GMT
Report

மகாராஜா படத்தில் நடித்தது குறித்து சச்சனா பேசியுள்ளார்.

மகாராஜா

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி வேணாம்னு சொன்னாரு.. என் வயசு இதுதான் -

இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதிக்கு இது 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஜா படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் விஜய் சேதுபதியின் மகளாக சச்சனா என்பவர் நடித்துள்ளார். இவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல பேருடன் போட்டி போட்டு ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் நடத்தி கடைசியில் செலெக்ட் ஆனேன்.

யாருமே நம்பல

நானும் இன்னொரு பொன்னும் கடைசியா செலெக்ட் ஆனதும், முதலில் என்னை வேண்டாம்னு விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், இயக்குநர் நித்திலன் சார் தான் நான் நடிச்சா சரியாக இருக்கும்னு சொன்னார்.

விஜய் சேதுபதி வேணாம்னு சொன்னாரு.. என் வயசு இதுதான் -

அப்பறம் ஷூட்டிங் நடந்துட்டு இருந்த ஒரு வாரத்தில் இயக்குநர் கிட்ட 'உங்க சாய்ஸ் சரியாக உள்ளது' என விஜய் சேதுபதி அப்பா சொன்னார். மேலும், சச்சனா குழந்தை நட்சத்திரம் என பலரும் நினைத்த நிலையில், தனது வயது 21 என வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஷூட்டிங் நடக்கும் போது காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். அப்போ என்னோட வயசு 18. அப்பவே செட்டில் யாருமே என்னை நம்பல. எல்லாம் ஸ்கூல் பொண்ணுன்னே நினைச்சாங்க" என்று சச்சனா தெரிவித்துள்ளார்.