செக் மோசடி வழக்கு.. பிரபல நடிகைக்கு சிறைத் தண்டனை!
செக் மோசடி வழக்கில் தென்னிந்திய நடிகை பத்மஜா ராவிற்கு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செக் மோசடி
கன்னட பிரபல நடிகையாக பத்மஜா ராவ் மங்களூருவில் வசித்து வருகிறார். வீரு டாக்கீஸ் உரிமையாளரான வீரேந்திர ஷெட்டியிடம் பத்மஜா ராவ் ரூ.40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கான உத்தரவாதமாக ICICI வங்கியின் செக்கை வீரேந்திர ஷெட்டியிடம் வழங்கியுள்ளார். நடிகை பத்மஜா ராவ் சில ஆண்டுகளாக தொகையைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளார் .
இதனையடுத்து ஜூன் 17, 2020 அன்று பத்மஜா வழங்கிய செக்கைச் செலுத்துவதற்காக வீரேந்திர ஷெட்டி வங்கியில் டெபாசிட் செய்தபோது நடிகையின் கணக்கில் போதுமான பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆனது. இதனை தொடர்ந்து ஜூன் 30, 2020 அன்று, 15 நாட்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு ராவுக்கு ஷெட்டி நோட்டீஸ் அனுப்பினார்.
3 மாத சிறை
ஆனால் இதற்க்கு எந்தப் பதிலும் இல்லை. இதையடுத்து வீரு டாக்கீஸ் உரிமையாளரான வீரேந்திர ஷெட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது மங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான, நடிகை பத்மஜா ராவின் வக்கீல், தனது வீட்டில் இருந்த காசோலையை யாரோ திருடிவிட்டதாகக் கூறினர். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
இந்த நிலையில் ,இறுதியாக இன்று நடைபெற்ற முழு விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் நடிகைக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும் , ரூ.40.20 லட்சம் அபராதம் செலுத்தவும் மங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.