செக் மோசடி வழக்கு - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதிரடி கைது!

Cricket India Indian Cricket Team
By Jiyath Feb 01, 2024 06:40 AM GMT
Report

காசோலை முறைகேடு வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கிரிக்கெட் வீரர் 

இந்திய கிரிக்கெட் அணிக்காக 1990-களில் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் பிரசாந்த் வைத்யா. இவர் தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

செக் மோசடி வழக்கு - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதிரடி கைது! | Former Cricketer Arrested Cheque Bouncing Case

இந்நிலையில் பிரசாந்த் வைத்யா உள்ளூர் வியாபாரி ஒருவரிடமிருந்து ஸ்டீல் வாங்கியுள்ளார். அதற்காக அவர் கொடுத்த காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆனது.

ஆட்டத்தை பார்ப்பதில்லை; அதைத்தான் கவனிக்கிறார்கள் - இந்திய வீராங்கனை வேதனை!

ஆட்டத்தை பார்ப்பதில்லை; அதைத்தான் கவனிக்கிறார்கள் - இந்திய வீராங்கனை வேதனை!

கைது 

இதனால் புதிதாக பணம் அனுப்பும்படி அந்த வியாபாரி வலியுறுத்தியபோது, அதற்கு வைத்யா மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த வியாபாரி நீதிமன்றத்தை நாடினார்.

செக் மோசடி வழக்கு - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதிரடி கைது! | Former Cricketer Arrested Cheque Bouncing Case

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பிணை தொகை அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார்.