நடிகைகள் குறித்து எல்லை மீறிய டாக்டர் - நடிகை ரோகிணியிடம் சிக்கிய சம்பவம்!
நடிகைகள் பற்றி தவறாகப் பேசியுள்ளதாக மருத்துவர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
மருத்துவர் காந்தராஜ்
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து , நடிகை ராதிகா ஊர்வசி உள்ளிட்ட சிலர் தமிழிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக வெளிப்படையாகக் கூறினர்.தொடர்ந்து இந்த விவகாரம் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்களால் ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது.
இந்த சூழலில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், திரைப்பட நடிகைகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: படத்தில் நடிக்கும்போது அனைத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு நடிக்கின்றனர்.
ஆபாச பேச்சு
தற்பொழுது 30 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் அளிக்கின்றனர் . மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே அட்ஜஸ்மெண்ட் விவகாரம் இருப்பதாகக் கூறி பகீர் கிளப்பினார். மேலும், நடிகைகள் சிலரது பெயரையும் குறிப்பிட்டு பல்வேறு ஆபாச தகவல்கள் குறித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், நடிகைகள் குறித்து ஆபாசமாகப் பேசியதாகக் கூறி மருத்துவர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நடிகையும், நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவரான ரோகிணி சென்னை காவல் ஆணையரகத்தில் இணையம் வழியாகப் புகார் அளித்துள்ளார்.