சமந்தா பாணியில்... ஐட்டம் டான்சராக மாறிய ரித்திகா சிங் - வியப்பில் ரசிகர்கள்!

Samantha Tamil Cinema Tamil Actress
By Vinothini Jul 30, 2023 04:00 PM GMT
Report

நடிகை ரித்திகா சிங் ஐட்டம் டான்சராக நடித்துள்ள பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் மாதவனுடன் இனைந்து நடித்துள்ளார் நடிகை ரித்திகா சிங், இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் MMA என அழைக்கப்படும் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியன் ஆவார்.

actress-rithika-danced-in-item-song

அதன்பிறகு லாரன்ஸ் உடன் சேர்ந்து சிவலிங்க படத்தில் நடித்துள்ளார். 2020ம் ஆண்டு அசோக் செல்வன், விஜய்சேதுபதி, வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு குறைந்துள்ளது.

ஐட்டம் டான்சர்

இந்நிலையில், இவர் துல்கர் சல்மா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, டான்ஸிங் ரோஸ், அனிகா சுரேந்திரன் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படத்தில் "கலாட்டக்காரா" எனும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். கவர்ச்சி உடையில் ரித்திகா சிங் துல்கர் சல்மான் உடன் நடனமாடிய காட்சிகளையும், அவரது டான்ஸ் ஸ்டில்களையும் எடுத்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

actress-rithika-danced-in-item-song

தொடர்ந்து, முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவே அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் "ஓ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போடவில்லையா? அதன் பின்னரும் அவர் ஹீரோயினாகத்தானே நடித்து வருகிறார்.

இவரும் சூஸ் பண்ணித்தான் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கான கதை அமைந்தால், நிச்சயம் அசத்தி விடுவார் என நெட்டிசன்களுக்கு ரித்திகா சிங்கின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.