சமந்தாவுக்கு டப் கொடுத்து வனிதா போட்ட ஐட்டம் டான்ஸ் - வைரலாகும் போட்டோ
வனிதா விஜயகுமார் என்றால் எப்போதும் அவரை சுற்றி உலா வரும் சர்ச்சைகள் தான் நினைவுக்கு வரும்.
பிக் பாஸ் ஷோவுக்குள் அவர் சென்ற போது தொடங்கிய சர்ச்சை, அதன் பின் பீட்டர் பால் திருமண சர்ச்சை, பவர் ஸ்டார் உடன் திருமண கோலத்தில் இருந்த போட்டோ வைரல் ஆனது என பல பிரச்சனைகள் அவரை பற்றி மிகவும் பரபரப்பாக பேச வைத்திருக்கிறது. தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
பவர் ஸ்டார் உடன் அவர் திருமண கோலத்தில் இருந்த போட்டோ பிக்கப் டிராப் என்ற படத்தின் போட்டோஷூட் என்பது பின்னர் தான் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது வனிதா காத்து என்ற படத்திற்காக ஐட்டம் பாடல் ஆடி இருக்கிறார்.
ஐட்டம் பாடலுக்கான உடை மட்டும் மேக்கப்பில் அவர் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரல் ஆகிறது. சமீபத்தில் சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய ஐட்டம் டான்ஸ் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், வனிதா அவருக்கு போட்டியாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.