20 வயசுல நடந்துச்சு.. அத நெனச்சு இப்பவும் வருத்தப்படுவேன் - மனம் திறந்த ரேவதி!

Revathi Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 16, 2024 05:01 PM GMT
Report

தனது திரைப்பயணம் மற்றும் திரை வாழ்வு குறித்து நடிகை ரேவதி பேசியுள்ளார்.

நடிகை ரேவதி 

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. மண்வாசனை என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து புதுமைப்பெண், ஆகாயத்தாமரைகள், ஒரு கைதியின் டைரி, மௌன ராகம், புன்னகை மன்னன், தேவர் மகன், தலைமுறை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

20 வயசுல நடந்துச்சு.. அத நெனச்சு இப்பவும் வருத்தப்படுவேன் - மனம் திறந்த ரேவதி! | Actress Revathy Talks About Her Marriage

மேலும், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது திரைப்பயணம் மற்றும் திரை வாழ்வு குறித்து நடிகை ரேவதி மனம் திறந்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் "புன்னகை மன்னன் படத்தில் தான் என்னுடைய டான்ஸ் திறமை முழுக்க முழுக்க வெளியில் வந்தது. கவிதை கேளுங்கள் பாடலுக்கு பிருந்தை தான் என்னை ட்ரெயின் பண்ணாங்க.

கமல் சார் ஒரு அருமையான டான்சர் என்பது எல்லாருக்குமே தெரியும். அவரோட ஆட எனக்கு ரொம்ப பதட்டமா இருந்துது. எனக்குத் தெரியாது.. அவருக்கு சரிசமமா நான் ஆடணும். நீ தான் என்னை அப்படி ட்ரெயின் பண்ணனும்னு பிருந்தா கிட்ட சொல்லிட்டேன்.

விஜய் சேதுபதி வேணாம்னு சொன்னாரு.. என் வயசு இதுதான் - 'மகாராஜா' மகள் பளீச்!

விஜய் சேதுபதி வேணாம்னு சொன்னாரு.. என் வயசு இதுதான் - 'மகாராஜா' மகள் பளீச்!

ஒரே ஒரு விஷயம்

அதுக்காக எனக்கு எக்ஸ்ட்ராவா ட்ரெயினிங் கொடுக்க சொன்னேன். ஒரு 3 நாட்கள் முன்னாடியே நாங்க ப்ராக்டிஸ் ஆரம்பிச்சுட்டோம். அப்புறம் தான் கமல் சார் கேள்விப்பட்டு வந்து ஜாயின் பண்ணிகிட்டாரு.

20 வயசுல நடந்துச்சு.. அத நெனச்சு இப்பவும் வருத்தப்படுவேன் - மனம் திறந்த ரேவதி! | Actress Revathy Talks About Her Marriage

சினிமாவில் மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாவது சம்பவம் நடந்து இருக்கானா.. இல்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் நான் இப்பகூட நினச்சு வருத்தப்படுவேன். ஒரு 4 வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணி இருக்கணும்.

இன்னும் கொஞ்ச நல்ல நல்ல படங்கள் பண்ணதுக்கு அப்புறம் நான் கல்யாணம் பண்ணி இருக்கலாம். அந்த சமயத்துல தான் புன்னகை மன்னன், மௌன ராகம் படங்கள் பண்ணேன். 17 வயசுல நடிக்க வந்தேன் 20 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஆனா.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வருஷம் பிரேக் எடுத்ததுக்கு அப்புறம் கூட கிழக்கு வாசல், தேவர் மகன் மாதிரி நல்ல படங்களில் மக்கள் என்னை ஏத்துக்கிட்டாங்க" என்று தெரிவித்துள்ளார்.