16 வருஷத்தில் கசந்த காதல்...48 வயதில் செயற்கை கருத்தரிப்பு....ரேவதியின் வாழக்கை
80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வளம் வந்த நடிகை ரேவதியின் காதல் வாழ்க்கை பெரிய இன்னல்க்ளை சந்தித்துள்ளது.
நடிகை ரேவதி
இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் கடந்த 1983-இல் அறிமுகமானவர் நடிகை ரேவதி. முதல் படமே மிக பெரிய வெற்றியை பெற தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான "வைதேகி காத்திருந்தாள்", "ஆண் பாவம்", மௌன ராகம், புன்னகை மன்னன் என தொடர் வெற்றி படங்களாக மாறின.
அறிமுகமான குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நாயகியாக மாறிய ரேவதி தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் ரேவதி இந்தி, ஆங்கில மொழியில் படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார்.
கசப்பான காதல் வாழ்க்கை
திரைத்துறையில் மிகவும் வெற்றியை பதிவு செய்திருந்த ரேவதியின் காதல் வாழ்க்கை அவ்வளவு இன்பமாக அமையவில்லை. ஒளிப்பதிவாளர், மலையாள திரையுலகில் இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட சுரேஷ் சந்திர மேனனனுடன் ரேவதிக்கு காதல் ஏற்பட்ட, அது கடந்த 1986-ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
காதல் திருமணமான இவர்கள் வாழ்க்கையில் குழந்தையின்மை பிரச்சனை மனக்கசப்பை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்கியது. 2002-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்னர், தனது 48 வயதில், 2014-ஆம் ஆண்டு ரேவதி செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு தற்போதும் திரையுலகில் பரபரப்பாக இயங்கி வருகின்றார்.