18 வயதில் டேட்டிங்.. அப்போவே அது பற்றி கேட்டேன், தெறிச்சு ஓடிட்டான் - ரேஷ்மா வெளிப்படை!

Tamil Cinema Reshma Pasupuleti Tamil Actress Actress
By Vinothini Sep 11, 2023 03:30 PM GMT
Report

நடிகை ரேஷ்மா தனது வாழ்க்கையில் நடந்த சமபாவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ரேஷ்மா பசுபுலேட்டி

தமிழ் சினிமாவில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தமிழில் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.

actress-reshma-pasupuleti-shared-her-memories

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டார், அதில் போல்ட் லேடியாக வலம் வந்தார். தற்பொழுது விஜய் டிவியில் பிரபலமான பாக்கியலட்சுமி என்ற சீரியலில் ராதிக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை பேட்டி

இந்நிலையில், இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவரது இளமை பருவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "நான் சிறுவயதில் ஸ்கூலுக்கு சரியாகவே போக மாட்டேன். நண்பர்களுடன் அண்ணாசாலையில் தான் சுற்றிக்கொண்டு இருப்பேன். இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிந்து பிறகுதான், நான் இங்கே இருந்தா ஓடிபோய்விடுவேன் என்று அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

actress-reshma-pasupuleti-shared-her-memories

அமெரிக்காவில் எனக்கு 18 வயசு இருக்கும் போது, ஒருவருடன் முதன் முதலில் டேட்டிங் போனேன், அப்போது அவரிடம் இதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுக்கூட டேட்டிங் போனீங்க, அவங்களுடன் உடலுறவு வெச்சி இருக்கீங்களா என அடுத்தடுத்து பத்து கேள்வி கேட்டேன்.

அதோடு போனவன் தான், அதுக்கு அப்புறம் ஒரு போன்கூட பண்ணல" என்று கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.