நீ வேற ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து கொள் - நடிகை ரேஷ்மாவுக்கு முன்னாள் கணவர் அட்வைஸ்
நீ வேற ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து கொள் என நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு முன்னாள் கணவர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
சினிமாவில் பிரபலம்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலஷ்மி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி (40). 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் காமெடி நடிகராக சூரியின் மனைவியாக நடித்து பிரபலமானார்.
பின்னர் நடிகர் விமல் நடித்த விலங்கு வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றார். இந்த நிலையில் அவரது கடந்து கால வாழ்க்கை மற்றும் மகன் குறித்து தகவல்களை சினிஉலகம் சேனல் எடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
மகனுடன் ரேஷ்மா
அந்த காணொளியில் தனது மகனை ரேஷ்மா அறிமுகப்படுத்தினார். அப்போது தனது மகனுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இதையடுத்து அவரது முன்னாள் கணவர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் நான் ரேஷ்மாவுக்கு முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.
எங்க மகனுக்கு சிறந்த தாயா இருக்குறதுக்கும், ரொம்ப சின்ன வயசுல மிக பெரிய பொறுப்புகளை சுமக்குறதுக்கும் முக்கியமா அவங்க கேரியர் பார்த்துட்டே பண்றதுக்கும்.
எனக்கு தெரியும், அவங்க கனவு எப்பவும் BIG SCREEN ல வர்றது தான். இன்னைக்கு அவங்கள அப்படி பாக்குறதுக்கு ரொம்ப வியப்பா இருக்கு. அவங்க வெற்றிக்கும் எல்லாத்துக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.
இதோ அதன் முழு வீடியோ...