மாராப்பு இறக்கிதான் புடவை கட்டுவேன்; இதுல என்ன தப்பு - கொதித்த ரேகா நாயர்!

Rekha Nair
By Sumathi Aug 09, 2023 02:30 PM GMT
Report

 தனது ஆடை சுதந்திரம் குறித்து நடிகை ரேகா நாயர் பேசியுள்ளார்.

ரேகா நாயர் 

பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் அறியப்பட்டவர் நடிகை ரேகா நாயர். இவர் எதையும் துணிவோடு பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார்.

மாராப்பு இறக்கிதான் புடவை கட்டுவேன்; இதுல என்ன தப்பு - கொதித்த ரேகா நாயர்! | Actress Rekha Nair Talk About Dress Style

தொடர்ந்து, இவர் குறித்த சர்ச்சை பேச்சுக்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்.

ஆடை சுதந்திரம் 

காலையில் வாக்கிங் செல்லும் போது, டவுசர் போட்டுக்கொண்டுதான் செல்வேன். அந்த உடையை போட்டுக்கொண்டு நான் தி நகருக்கோ, மாலுக்கோ போனால், மற்றவர்கள் கை வைக்கத்தான் செய்வார்கள்.

மாராப்பு இறக்கிதான் புடவை கட்டுவேன்; இதுல என்ன தப்பு - கொதித்த ரேகா நாயர்! | Actress Rekha Nair Talk About Dress Style

அந்த இடத்திற்கு அந்த ஆடையை போட்டுக்கொண்டு சென்றது யாருடைய தப்பு. அதே போல, நான் மாராப்பை இறக்கிவிட்டுத்தான் புடவை கட்டுவேன் அது என்னுடைய ஸ்டைல், இதை நான் அழகியலாக பார்க்கிறேன். இதை ஆண்கள் ரசிக்கிறார்கள் இதில் என்ன தப்பு இருக்கிறது எனப் பேசியுள்ளார்.