தெலுங்கு நடிகருடன் காதல்..? விரைவில் திருமணமாகி செட்டிலாகும் ரெஜினா...?
நடிகை ரெஜினாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரெஜினா
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் - விமல் நடிப்பில் வெளியான "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ரெஜினா.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர், தற்போது அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகின்றார்.

சினிமாவில் பரபரப்பாக இயங்கி வரும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
திருமணம்
தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனுடன் இவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ரெஜினாவின் பிறந்தநாளில் சந்தீப் அளித்திருந்த வாழ்த்து செய்தி வைரலாகியது.

அதனை தொடர்ந்து இருவரும் காதலில் இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், அதனை அப்போதே ரெஜினா மறுத்திருந்தார். ஆனால், ரெஜினாவிற்கும் சந்தீப்பிற்கும் விரைவில் என்ற செய்தி தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil