பிரபல நடிகர் என்னை அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்தார் - சீரியல் நடிகை பகீர் தகவல்!
பெரிய நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்ததாக நடிகை ரீஹானா தெரிவித்துள்ளார்.
நடிகை ரீஹானா
பிரபல ஆனந்தராகம் சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரீஹானா. சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை துணிந்து சொல்லக்கூடியவர். சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இடையே நடந்து வரும் பிரச்சனை குறித்து கூட வெளிப்படையாக பேசி இருந்தார்.
மேலும், அர்னவ், திவ்யா விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ரீஹானா, எந்த இடத்திற்கு சென்றாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒரு விஷயம் இருக்கத்தான் செய்யும். பெரிய நடிகர் ஒருவடன் நடித்துக்கொண்டு இருந்தேன். வர் நிறைய டேக் எடுத்துக்கொண்டே இருந்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
ஆனால் ஒன் டேக்கில் நான் நடித்து முடிச்சிட்டு என் இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டேன். அப்போது அவர் என்னை பாராட்டி வழிந்து பேசினார். பின் நம்பர் கேட்டார். ஒரே துறையைச்சேர்ந்தவர்கள் என்பதால் கொடுத்தேன். உடனே மெசேஜ் அனுப்பி வர்ணித்து இருந்தார். எனக்கு நைசாக நூல் விட்டுப் பார்த்தார்.
அவரை பிளாக் செய்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் வந்து மெசேஜ் செய்தார். அதன்பின் நான் நோ கூறிவிட்டேன். அதனால், சீனில் இருந்தே என்னை தூக்கிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.