இயக்குநருடன் மலர்ந்த காதல் - காதலரை அறிமுகம் செய்த மாமன்னன் பட நடிகை ரவீனா ரவி
மாமன்னன் படத்தில் நடித்துள்ள ரவீனா ரவி தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ரவீனா ரவி
மறைந்த நடிகர் முரளி நடிப்பில் வெளியான ஊட்டி படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரவீனா ரவி(raveena ravi).
2012ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக அறிமுகமான ரவீனா தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இயக்குநருடன் காதல்
அதன்பின் 2017 ஆம் ஆண்டு ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரவீனா ரவி, அதனை தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் உருவான வாலாட்டி என்கிற திரைப்படத்தில் நடித்தபோது, அப்படத்தின் இயக்குனர் தேவன் ஜெயக்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த காதல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.