ஒரு முட்டாளான நபரை நம்புவது தான்...வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் பதிவு!
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் 'சுல்தான்', 'வாரிசு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.அது மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும்தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் அண்மையில், ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மெகா ஹிட் அடித்த இந்த படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
வைரல் பதிவு
இந்தநிலையில், ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் அனிமல் படத்தில் நடித்த ராஷ்மிகாவுடன் ரன்பீர் கபூர் பேசும் சில காட்சிகளை எடிட் செய்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு திரிப்தி டிம்ரி கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும்.

அதனை வெளியிட்ட அவர் அந்த பதிவில், 'ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, ரசிகரின் அந்த பதிவிற்கு மறு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயங்கரமானது. நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல்,'என தெரிவித்துள்ளார். அவரது இந்த வரிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Remember nothing is scarier than trusting a man..#RanbirKapoor #RashmikaMandanna
— Falena? (@_ivsfa8) June 13, 2024
#TriptiDimri#Animal pic.twitter.com/DEAw6Dxhlf
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    