கைலாசாவின் பிரதமராகிறார் நடிகை ரஞ்சிதா - தீயாய் பரவும் தகவல்!
கைகாசாவின் பிரதமாராக நடிகை ரஞ்சிதா இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
நடிகை ரஞ்சிதா
2010ம் ஆண்டு கார்நாடக அமர்வு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டினை நித்யானந்தா மீது பிறப்பித்தது. மேலும், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், குஜராத் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகளை கடத்திய வழக்குகளும் உள்ளன.
இந்திய மாநிலங்களில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நித்யானந்தா வழக்குகளில் இருந்து தப்பி, 'கைலாசா' என்னும் நாட்டினை உருவாக்கி அதில் தற்போது வாழ்ந்து வருகிறார்.
கைகாசா பிரதமர்
தொடர்ந்து, ஐநா கூட்டத்தில் கைலாசாவை சேர்ந்த பெண் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டு பேசியது, உலகெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனி நாடான கைலாசாவின் பிரதமர் என்ற பெயரில் சமூக வலைத்தளமான லிங்குடு இன்னில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதன் ப்ரொபைல் படமாக நடிகை ரஞ்சிதாவில் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அதற்கு கீழ் "தனித்த இறையாண்மை கொண்ட கைலாசாவின் பிரதமர். இந்துக்களுக்கான முதல் தேசம்" என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.