காதல் தோல்வியில் மீள முடியாமல்..உடலில் ஏற்பட்ட அந்த மாற்றம் - ரம்யா பாண்டியன் ஓபன்டாக்!
காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்ததாக ரம்யா பாண்டியன் பகிர்ந்துள்ளார்.
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து, ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் அவரது நடப்பால் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் முகிலன் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், பிக்பாஸ் சீசன் 4 பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,
காதல் தோல்வி..
அவரது முன்னாள் காதலர் குறித்து ரம்யா பாண்டியன் பேசியுள்ளார். அதாவது, எனக்கு ரொம்பவே பேட் பிரேக்கிங் நடந்தது. அதில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை. அதில் இருந்து மீள முடியாமல் உடைந்துபோய்விட்டேன்.
இதன் காரணமாக எனது உடலில் மாற்றம் ஏற்பட்டு மிகவும் ஒல்லியாக மாறிவிட்டேன். இதில் இருந்து என்னுடைய அக்கா தான் என்னை மீட்டு கொண்டு வந்தார் என்று ரம்யா பாண்டியன் உருக்கமாக கூறியுள்ளார்.