ரசிகர்களின் செய்கையால் நொந்து போன நடிகை ரம்பா!
நடிகை ரம்பா ரசிகர்கள் குறித்து சமீபமாக வெளியிட்ட வீடியோ வைரலாகு வருகிறது.
ரம்பா
நடிகை ரம்பா 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். பிரபுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சுந்தர் சியின் உள்ளத்தை அள்ளித்தா மூலம் ஃபேமஸ் ஆனார். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.
தற்போது திருமணம் முடிந்து தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார். 2010 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக் கொண்டார் இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்கள் திரும்ப சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் வழக்கு வாபஸ் ஆனது.
நெகட்டிவிட்டி வேண்டாம்
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் அண்மையில், நடிகை மீனாவின் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து சென்னையில் அவருக்கு சொந்தமான பேக்டரியில் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
Something is weird about this video.. ?
— Arima (@Dracarys28) October 28, 2022
But the message is ??#Rambha https://t.co/XJwUTXfTgk
இந்நிலையில் தனது பதிவில் நெகட்டிவாக பேசாதீர்கள். ஜோக்காக கூட இதை செய்ய வேண்டாம். உங்களுடைய உடல் இதற்கான வித்தியாசத்தை அறியாது. நாம் பேசும் வார்த்தைகளை பாசிட்டிவாக மாற்றிக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக மாறும் என ரசிகர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.