அவரை ரொம்ப பிடிக்கும்; அவங்கல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க - ரம்பா வேதனை!

Rambha Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 30, 2024 10:05 AM GMT
Report

தனக்கு பிடித்த நடிகை மற்றும் தோழி குறித்து நடிகை ரம்பா பேசியுள்ளார். 

நடிகை ரம்பா

90-ஸ் காலகட்டத்தில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

அவரை ரொம்ப பிடிக்கும்; அவங்கல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க - ரம்பா வேதனை! | Actress Ramba About Young Actresses

ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ரம்பாவிடம், சினிமாவில் உங்கள் தோழி யார்? பிடித்த நடிகை யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு; அதுக்கு ரொம்ப முக்கியமானது.. நடிகை ஓபன் டாக்!

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு; அதுக்கு ரொம்ப முக்கியமானது.. நடிகை ஓபன் டாக்!

த்ரிஷா பிடிக்கும்

அதற்கு பதிலளித்த அவர் "திரைத்துறையில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் சௌந்தர்யா. அவர் பேசுவதும் பழகுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல, மகேஸ்வரி எனது சிறந்த தோழி. திரைத்துறையில் மிகவும் நெருக்கமான தோழிகள் என்று எனக்கு யாருமில்லை" என்றார்.

அவரை ரொம்ப பிடிக்கும்; அவங்கல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க - ரம்பா வேதனை! | Actress Ramba About Young Actresses

மேலும், தற்போது இருக்கும் நடிகைகளில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரம்பா, "த்ரிஷாவை மிகவும் பிடிக்கும். அவரை ஓரிரண்டு முறை பார்த்திருக்கிறேன். அவர் நன்றாக பேசுவார். ஆனால், மற்ற நடிகைகள் அப்படி இல்லை. என்னை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.