Tuesday, Jun 3, 2025

என் மகளுக்கு ப்ரோமோஷன் கிடைச்சுருக்கு - வாழ்த்து தெரிவித்த நடிகை ராதா!

Radha Tamil Cinema Marriage
By Sumathi a year ago
Report

நடிகை ராதா தனது மகளுக்கு புரோமஷன் கிடைத்திருப்பதாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை ராதா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ராதா. 1980 காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் என தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

actress radha

இவருடைய மூத்த மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக, ’கோ’ படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்த அவர், சினிமா விட்டு விலகினார். இந்நிலையில், இவருக்கு ரோஹித் மேனன் என்பவருடன் திருவனந்தபுரத்தில் கடற்கரையோரம் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

25 வருடங்களுக்கு பிறகு கணவருடன் குஷியில் நடிகை ராதா - எதற்காக தெரியுமா?

25 வருடங்களுக்கு பிறகு கணவருடன் குஷியில் நடிகை ராதா - எதற்காக தெரியுமா?

மகளுக்கு வாழ்த்து

இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் நடிகை ராதா னது மகளை புதிதாக திருமணம் செய்த பெண்ணாக பார்த்ததிலேயே எனக்கு ஆனந்தமும் பெருமையும். ஆனால் இப்போது இந்த புது மருமகள் குடும்பத்தின் மூத்த மருமகளாக ப்ரமோஷன் அடைந்திருப்பது மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களது குடும்பத்திற்கு புதிய மருமகளை வரவேற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என இன்ஸ்டா பதிவை பகிர்ந்துள்ளார். டிகை கார்த்திகா நாயரின் கணவர் ரோகித் மேனனின் தம்பிக்கு திருமணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.