வடிவேலுவுக்கு ஈகோ.. அப்போ அவர் அப்படிப்பட்டவர் தான் - சுந்தரா டிராவல்ஸ் நடிகை பேட்டி!
சுந்தரா டிராவல்ஸ் நடிகை நடிகர் வடிவேலு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் நடிகர் முரளி, வடிவேலு நடிப்பில் சுந்தரா டிராவல்ஸ் என்ற படம் வெளியானது. அதில் ஹீரோயினாக நடித்து நடிகை ராதா அறிமுகமானார். இந்த படம் அதன் காமெடியால் பயங்கர ஹிட் ஆனது, தற்பொழுது வரை காமெடிக்காக இந்த படம் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு பின்னர் நடிகை ராதா வாய்ப்புகள் இல்லமால் காணாமல் போனார். பின்னர் இந்த ஒரு படமே இவருக்கு அடையாளமாக ஆனது, தற்பொழுது இவர் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீசன் 2-வில் நடித்து வருகிறார்.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது படவாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், வடிவேலு பற்றி பேசினார், "வடிவேலு சார் எல்லோருடன் அன்பாக இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அரவணைத்து செல்வார். வசனம் எல்லாம் நான் எப்படி போகிறேனோ அதற்கேற்றமாதிரி அவரும் பேசுவார்.

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ஒரு காட்சியில் 3 முறை வசனம் பேச வேண்டும். எனக்கு அந்த காட்சியில் உதவினார். அவரிடம் ஈகோ எல்லாம் கிடையாது. இப்ப உள்ள வடிவேலு பற்றி எனக்கு தெரியாது. நாங்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து தான் சாப்பிடுவோம்.
என்னை பார்க்கும் மக்கள் எல்லாம் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் வசனத்தை பேச சொல்லி கேட்பதை பார்க்கும் போது மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan