கணவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றார் நடிகை ராதா
தன்னை அடித்து துன்புறுத்துவதாக நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் மீது அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
நடிகர் முரளிக்கு ஜோடியாக சுந்தரா டிராவல்ஸ் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராதா. இவர் அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் சென்னை எழும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜ் என்பவரை கடந்த ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார் நடிகை ராதா. இவர்கள் இருவரும் சாலிகிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், வசந்த ராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வசந்த ராஜு தன்னை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார் நடிகை ராதா. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்தார் வசந்த ராஜு.
தன்னை ராதா வற்புறுத்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ராதாவிற்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருப்பதாகவும், அதை தட்டிக் கேட்டதால்தான் என் மீது தேவையில்லாமல் வீண்பழி சுமத்துகிறார் என்று கூறினார்.
மேலும், ராதா எனக்கு தெரியாமல் எனது ஆதார் மற்றும் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டு ரூ.35 லட்சம் மதிப்புள்ள காரையும் வாங்கியிருக்கிறார் என்று வசந்த ராஜு குற்றம் சாட்டினார்.
பின்னர், இருவரிடமும் பேசிய போலீசார் சமாதானப்படுத்தினர். பிறகு, வசந்தராஜு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இதனையடுத்து நடிகை ராதா கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.