எனக்கு இனி எல்லாமே இவர் மட்டும் தான், ரச்சிதாவின் முடிவு - வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை ரச்சிதா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்ததாக கூறப்பட்டது.
வைரல் வீடியோ
இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அப்பொழுது அவரது கணவர் குறித்து எந்த தகவலும் கூறவில்லை. தற்போது இவர்களின் திருமண வாழ்கை முடிவுக்கே வந்துவிட்டது என்று தெரிகிறது.
மேலும் எதை நினைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் ரச்சிதா நுழைந்தாரோ அது நிறைவேறியது. அதை தொடர்ந்து ‘மெய்நிகரே’ என்ற படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் "என் சோகத்தை மறைக்க திரப்பிஸ்டை பார்க்க செல்கிறான்" என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது தனது திரப்பிஸ்ட் இவர் தான் என்று தனது செல்ல பூனை குட்டியை கொஞ்சும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.