கூடவே இருந்து கவனித்த ரச்சிதா; தந்தை திடீர் மரணம் - கண்ணீரில் குடும்பம்!
நடிகை ரச்சிதாவின் தந்தை காலமானார்.
நடிகை ரச்சிதா
தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் ரச்சிதா. அதில் 'சரவணன் மீனாட்சி' மூலம் பிரபலமானார். அதன்பின், பிக் பாஸ் சீசன் 6 ல் இவர் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டார்.
இதற்கிடையில் நடிகர் தினேஷைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார். த்ர்போது, கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதி கடந்த சில வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தந்தை மறைவு
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷ் மீது ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த ரச்சிதாவின் தந்தை இன்று காலை பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் காலமானார்.
தந்தையுடன் ஏற்கனவே உடனிருந்து கவனித்து வந்தார்.
இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.