ஆபாசம்..மிரட்டல்; கனவரால் பதறியடித்து இரவோடு இரவாக ஸ்டேஷன் ஓடிய ரச்சிதா - பகீர்!
கணவர் தன்னை மிரட்டுவதாக நடிகை ரச்சிதா போலீஸில் புகாரளித்துள்ளார்.
ரச்சிதா மகாலெட்சுமி
விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.
சமீபத்தில், கருத்து வேற்பாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தினேஷ் தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார் என்றும்
போலீஸில் புகார்
மிரட்டல் விடுப்பதாகவும் கூறி நடிகை ரச்சிதா மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப்புகாரின் பேரில் ஆஜரான தினேஷ் ரச்சிதா விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இடையிலான பிரச்சினைக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டான ஜிஜியின் தலையீடுதான் காரணம் எனும் தகவல் சின்னத்திரை வட்டாரங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.