சின்னத்திரை நடிகை ரட்சிதாவுக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பிய நடிகர் - இரவோடு இரவாக காவல்நிலையம் சென்று புகார்
பிரபல சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி தனது கணவரும் நடிகருமான தினேஷ் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுப்பதாக கூறி இரவில் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
காதல் திருமணம்
தனியார் தொலைக்காட்சி சீரியல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இரவில் காவல் நிலையம் சென்று புகார்
கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாங்காடு காவல் நிலையத்தில் ரட்சிதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனது கணவர் தினேஷ் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதோடு, மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். இப்புகாரின் பேரில், இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்