பிரபல இயக்குனரை 2வது திருமணம் செய்யப்போகும் ரட்சிதா? தீயாய் பரவும் தகவல்
ரட்சிதா 2வது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரட்சிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமானார் ரட்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலுக்கு பின் ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். மேலும் நடிகர் தினேஷை 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் ரட்சிதா மகாலட்சுமிக்கு சீரியல் வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது. இதனால் இவர்கள் இருவருக்கும் மனரீதியாக சண்டைகள் உருவானதையடுத்து இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
2வது திருமணம்
தொடர்ந்து, ரட்சிதா பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வலம் வந்தார். இந்நிலையில் நடிகை ரக்ஷிதா சின்னத்திரை இயக்குரை கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாகவும்,
அவரை விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.