18 வயதில் காதல்; அந்த 2 விஷயம் மட்டும் வேண்டாம் - காதலருக்கு கண்டிஷன் போட்ட பிரியா பவானிசங்கர்!
தனக்கு பிடிக்காத விஷயங்கள் குறித்து பிரியா பவானிசங்கர்கூறியுள்ளார்.
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடர் மூலம் பிரபமடைந்தார்.
இதனையடுத்து, ‘மேயாத மான்’ படத்தில் முதல்முதலாக கதாநாயகி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், டைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.
பிடிக்காத விஷயம்
இன்ஸ்டகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் திடீரென தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
நான் என்னுடைய 18 வயசிலேயே ரிலேஷன்ஷிப்பில் இணைந்து கொண்டேன். என் பாய் பிரண்ட் கிட்ட பொம்மையை வாங்கிட்டு வந்து கொடுத்துறாத. காசையெல்லாம் வேஸ்ட் பண்ணாத. அதற்கு பதிலாக ஏதாவது சாப்பாடு வாங்கி கொடு என்று சொல்வேன்.
இந்த ரோஜா மாதிரியான பூக்களையும் வாங்கிக் கொடுக்கிறது வேண்டாம் என்று சொல்லிட்டேன். அவன், பூ வாங்கிட்டு வரதுக்குள்ள அது வாடிடும் எனத் தெரிவித்துள்ளார்.