47 வயதில் பிரபலத்துடன் 2வது திருமணம் - கடுப்பில் விளாசிய நடிகை!
நடிகை பிரகதி 2வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பிரகதி
தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளவர் நடிகை பிரகதி. ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவ்வப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
2வது திருமணம்
பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலம் ரசிகர்கள் தக்க வைத்துள்ளார். தனது 20வது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், டோலிவுட் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை பிரகதி காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இதனை அறிந்து கடுப்பான பிரகதி, ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்ட தெலுங்கு தொலைக்காட்சியை சரமாரியாக சாடியுள்ளார். நடிகை என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா என வன்மையாக கண்டித்துள்ளார்.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil