படுக்கைக்கு அழைத்த பிரபல காமெடி நடிகர்; கேரவனுக்கு அழைத்து.. சீக்ரெட் உடைத்த நடிகை!

Tamil Cinema Tamil TV Serials
By Sumathi Feb 02, 2024 05:30 PM GMT
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் அவலம் குறித்து நடிகை பிரகதி மனம் திறந்துள்ளார்.

நடிகை பிரகதி

தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளவர் நடிகை பிரகதி. ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

actress-pragathi

அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவ்வப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலம் ரசிகர்கள் தக்க வைத்துள்ளார்.

தனது 20வது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

47 வயதில் பிரபலத்துடன் 2வது திருமணம் - கடுப்பில் விளாசிய நடிகை!

47 வயதில் பிரபலத்துடன் 2வது திருமணம் - கடுப்பில் விளாசிய நடிகை!

அட்ஜெஸ்ட்மெண்ட்?

இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் “ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையில் நடந்த சம்பவம் இது. சீனியர் காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக என்னிடம் அப்போது தவறாக நடந்துகொண்டார். அதுமட்டுமின்றி மறைமுகமாக படுக்கைக்கும் என்னை அழைத்தார். அன்றைய ஷூட்டிங் முடியும்வரை பொறுமையாக இருந்தேன்.

படுக்கைக்கு அழைத்த பிரபல காமெடி நடிகர்; கேரவனுக்கு அழைத்து.. சீக்ரெட் உடைத்த நடிகை! | Actress Pragathi About Comedy Actor Adjustment

பிறகு அவரை எனது கேரவனுக்கு வரவழைத்து பேசினேன். பிறகு அவரை எனது கேரவனுக்கு வரவழைத்து பேசினேன். அப்போது அவரிடம், நீங்கள் என்னிடம் தவறாக நடந்துகொள்ளலாம் என்று நான் எதுவும் உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா’ என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று சொன்னார். சரி எனது உடல் மொழி எதுவும் உங்களுக்கு அப்படி தோன்ற வைத்ததா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்று சொன்னார்.

உடனே நான், நீங்கள் நடந்துகொண்ட விதம் ரொம்பவே தவறானது. ரொம்பவும் கீழ்த்தரமான செயல். நீங்கள் என்னிடம் கேட்ட அந்த இடத்திலேயே உங்களை அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்க முடியும். ஆனால் உங்களது இமேஜ் உடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்துவிட்டு இப்போது தனியாக அழைத்து சொல்கிறேன் என்று எச்சரித்து அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.