அந்த படத்தில் கர்ப்பமானேன்; அவர்களை என்னால் மறக்கவே முடியாது - நடிகை பூர்ணா ஓபன்டாக்!

Tamil Cinema Actress Poorna Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Feb 02, 2024 04:00 PM GMT
Report

டெவில் திரைப்படம் குறித்து நடிகை பூர்ணா பேசியுள்ளார் 

டெவில்

சவரக்கத்தி என்ற படத்தை இயக்கிய ஆதித்யா 'டெவில்' படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் ஆவார். இந்த படத்தில் விதார்த், பூர்ண, ஆதித் அருண், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அந்த படத்தில் கர்ப்பமானேன்; அவர்களை என்னால் மறக்கவே முடியாது - நடிகை பூர்ணா ஓபன்டாக்! | Actress Poornaa Talks About Devil Movie

மேலும், முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டெவில் படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை பூர்ணிமா பேட்டி அளித்திருந்தார்.

கவுண்டமணி சினிமால பாக்குற மாதிரி இல்ல; அந்த படம் பாக்க சொல்லி.. - போட்டுடைத்த சுகன்யா!

கவுண்டமணி சினிமால பாக்குற மாதிரி இல்ல; அந்த படம் பாக்க சொல்லி.. - போட்டுடைத்த சுகன்யா!

குழந்தை பிறந்தது

அப்போது பேசிய அவர் "இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. இதனால், டெவில் படத்தை என்னால் மறக்கவே முடியாது.

அந்த படத்தில் கர்ப்பமானேன்; அவர்களை என்னால் மறக்கவே முடியாது - நடிகை பூர்ணா ஓபன்டாக்! | Actress Poornaa Talks About Devil Movie

இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போதுதான், எனக்கு தலைசுற்றல் வந்தது. அப்போது தான் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரிந்தது. நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அனைவரும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள்" என்று பேசியுள்ளார்.