உன் அம்மாவோட உடம்பை பாரு; மோசமான கமெண்ட் - தரமான பதிலடி கொடுத்த பூர்ணா!
நடிகை பூர்ணா மோசமான கமெண்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை பூர்ணா
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பின், கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி, தகராறு என தமிழில் பல படங்களில் நடித்தார்.
தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது டெவில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் வாழ்க்கையில் ஜெயித்து இந்த இடத்தில் இப்போது இருப்பதற்கு முக்கிய காரணம் என் அம்மா தான்.
கமெண்டுக்கு பதிலடி
எனக்கு திருமணம் என்ற போது எனக்குள் ஒருவித பயம் வந்துவிட்டது. ஏனெனில் சினிமாவில் பலரும் திருமணம் செய்துக்கொண்டு நாளடைவில் பலவிதமான பிரச்னைகளால் பிரிந்து விடுகின்றனர். அதற்கு அவர்கள் சினிமாவில் பணிசெய்வதும் ஒரு காரணமாக இருக்கிறது.
குழந்தை பிறந்த 15 நாட்களுக்கு பிறகு நான் குண்டூர் காரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நான் நடித்த போது மிக குண்டாக இருந்தேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் உடலை கேலி செய்யும் விதமாக பன்னி மாதிரி இருக்கிறீர்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்திருந்தார்கள்.
அதற்கு நான், உங்கள் அம்மாவை பாருங்கள், அவரும் இதே மாதிரியான ஒரு நடைமுறையை கடந்துதான் வந்திருக்கிறார் என பதிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.