தொடக்கூடாது என எப்படி சொல்ல முடியும் - விமர்சனங்களுக்கு ரோஜா விளக்கம்!
நடிகை ரோஜா துப்புரவு தொழிலாளரை அவமதித்து விட்டது கடந்த சில நாட்காளாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ரோஜா
நடிகையாக இருந்து, ஆந்திரா - தமிழ்நாடு மாநிலங்களில் 90-களில் பெரிதாக கோலோச்சினார் ரோஜா. ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு, அரசியலில் கவனம் செலுத்தினார்.
கடந்த ஆந்திர சட்டமன்றத்தில் அமைச்சராக இருந்தவர், தற்போது தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியும் முதல்வர் பதவியை இழந்துள்ளார். எப்போதும் கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ரோஜா. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட அவர், தமிழக கோயில்களில் வழிபாடு நடத்தவும் வழக்கமாக உள்ளது.
அப்படி தான் அவர், திருச்செந்தூர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு சாமி கும்பிட சென்றார். பிரபலம் ஒருவரை கண்டதை பலரும் அணுகி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வது இயல்பான ஒன்றே.
அப்படி பலரும் ரோஜாவுடன் அன்று போட்டோ எடுத்து கொண்டிருந்த போது, பெண் ஒருவர் ரோஜாவிடம் வர, ரோஜா சைகையில் ஏதோ கூறினார். இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் ரோஜா மீது தொடுக்கப்பட்டன.
நெருங்கி வந்த பெண் துப்புரவு தொழிலாளர் என்றும், அவரை தான் ரோஜா அருகே நெருங்க வேண்டாம் என கூறியதாக சலசலக்கப்பட்டது. இவ்வாறான சூழலில் தான் ரோஜா இது தொடர்பாக விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
நான் ஏன்...
அதில், கோவில் தரைதளம் தாழ்வாக இருந்ததால் அவர்கள் ஓடி வந்தால் விழுந்து விடப்போகிறார்கள் என்று கருதி "மெதுவா வாங்க" என்று மட்டும்தான் கைகாட்டி பேசினேன் என ரோஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களை தான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என்று சொன்னதாக தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்த ரோஜா, துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது என்றும் அவர்கள் மீது தனக்கு மரியாதை இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.