பிக் பாஸ் பாவனியை கழட்டிவிட்ட அமீர்? நடிகை வெளியிட்ட பதிவு - ஷாக்கில் ரசிகர்கள்!
பிக் பாஸில் ஜோடியான அமீர் பவானிக்கு பிரேக் அப் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல் நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை பாவனி. இவர் இந்த சீரியலில் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் அதன்பிறகு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்தார். பிறகு பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ்ஸில் கலந்துகொண்டார், அதில் பல ரசிகர்களை ஈர்த்தார்.
இவரது முதல் கணவர் இறந்தது குறித்த விஷயங்களை அதில் பகிர்ந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் அமீர் கலந்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டும் பல இண்டர்வியூ கொடுத்து வந்தனர்.
பிரேக் அப்
இந்நிலையில், நடிகை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் பாவனியிடம் நீங்கள் கமிட்டடா என்று கேட்க? இல்லை நான் சிங்கிள் என்று பதிலளித்துள்ளார். மேலும், இன்னொரு ரசிகர் நீங்கள் அமீரை காதலிக்கிறீர்களா? என்று கேட்க, அதற்கு அப்படியா அமீர் என்று அமீரை தயார் செய்து பாவனி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இப்படியாக சில ஸ்டோரிகளை பாவனி பகிர்ந்து இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.