பாலியல் கல்வி இருக்கு.. அதை பிராக்டிஸ் பண்ணனும், அந்த விஷயம் லீகல் ஆகனும் - ஓவியா ஓபன் டாக்!
பிரபல நடிகை ஓவியா பாலியல் கல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை ஓவியா
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா. அதில் பல ரசிகர்களை ஈர்த்தார், அதன்பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் ஹிட் ஆனது, ஆனால் ஓவியா அதில் பெரிதளவு தெரியவில்லை. பிறகு அவர் ஒரு சில படங்களில் நடித்தார், ஆனால் அது அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். அதில் இவரது எதார்த்த பேச்சால் ரசிகர்களை ஈர்த்தார், இவருக்கென்று ஓவியா ஆர்மி தொடங்கினர். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்றே சொல்லலாம். பின்னர் ஓவியா காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றது.
நடிகை பேட்டி
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், "பாலியல் கல்வி இருந்து என்ன பிரோயஜனம். அதை பிராக்டிக்கலாக செய்து பார்க்க வேண்டும்தானே. எல்லோரும் ஒரு முகமூடி போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. ஹார்மோன்கள் இருக்கின்றன. கலாசாரத்துக்கு பின்னால் பலர் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.
விபசாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். அப்படி செய்தால் பாலியல் பலாத்காரம் எல்லாம் கம்மியாகிவிடும்" என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.