கிளாமர் காட்சி.. அந்த மாதிரி புதுசா ட்ரை பண்ணேன், அதுக்கு வீட்டில் கொடுத்த ரியாக்ஷன் - நிவேதா பெத்துராஜ் பேட்டி!
நடிகை நிவேதா கிளாமர் காட்சி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம் என்ற படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடித்தவன், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதேபோல் அருண்விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ரெட் படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இவர் பல தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
பேட்டி
இந்நிலையில், அவர் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கிளாமர் குறித்த கேள்விக்கு அவர், " நான் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தேன். தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் கிளாமராக நடித்தேன். ஆனால் அதை பார்த்துவிட்டு வீட்டில் ஒன்னும் சொல்ல வில்லை.
அவர்கள் புரிந்து கொண்டார்கள், ஏதும் என்னிடம் சொல்லவில்லை. படு கவர்ச்சியான ரோலில் நடித்து வீட்டில் இருப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் இருக்க கூடாது. ஓவர் கிளாமரான காட்சி இருந்தால் அதில் நடிக்க மாட்டேன். இதனால் பல பட வாய்புகளை நிராகரித்து இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.