திருமணத்திற்கு ரெடியான நடிகை நித்யா மேனன்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை நித்யா மேனன் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். இவர் ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளராக ஆகவேண்டும் என்று நினைத்தார், பின்னர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு படிப்பில் சேர்ந்தார். பிறகு திரைப்படம் நடிப்பதில் ஆர்வம் கொண்டார்.
இவர் தனது 10வது வயதில் ஹனுமான் என்ற பிரெஞ்சு-இந்திய ஆங்கிலத் திரைப்படத்தில் தபுவின் கேரக்டருக்கு தங்கையாக நடித்தார். இவர் தமிழில் வெப்பம்’, ’ஓகே கண்மணி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்பொழுது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார், அதில் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
திருமணம்
இந்நிலையில், இவருக்கு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெறவுள்ளது எனத் தகவல் வெளியான நிலையில், அதை நித்யா மேனன் மறுத்திருந்தார். ஆனால் தற்பொழுது மீண்டும் அவருக்குத் திருமணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது, சமீபத்தில் அவர் தனது நண்பரான மலையாள ஹீரோவுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
ஆனால், இது அவர் நடிப்பில் வெளியாக உள்ள புதிய வெப் சீரிஸூக்கான புரோமோதான் எனவும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இன்னும் நித்யா மேனன் இது குறித்து விளக்கம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.