என் பெயரில் சாதி அடையாளமா? விளக்கமளித்த நடிகை நித்யா மெனன்
தனது பெயரில் சாதி அடையாளம் இல்லை என நடிகை நித்யா மெனன் விளக்கமளித்துள்ளார்.
நித்யா மெனன்
'180' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நித்யா மெனன்(Nithya Menen). அதன் பின் மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் உடன் இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார்.
பெயர் காரணம்
இந்நிலையில் தனது பெயர் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் பேசிய அவர், "எனது பெயரை யாரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும், மேடம், கொச்சிக்கு டிக்கெட் புக் செய்யட்டுமா? எனக் கேட்கிறார்கள். என்னுடைய கார் எண் கன்னடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் பெயருக்கு முன்பு பெற்றோரின் முதல் எழுத்தை இனிசியலாக சேர்ப்பது வழக்கம்.
அம்மா பெயர் நளினி, அப்பா பெயர் சுகுமார். எனவே எனது பெயரை என்.எஸ். நித்யா என வைத்துக்கொண்டேன். இந்த பெயரால் பாஸ்போர்ட்டில் சில பிரச்சினைகள் வருமென்பதால் நியூமராலஜி ஜோதிடப்படி மெனன் என்னும் பெயரை வைத்தேன். பெயருக்குப் பின்னால் சாதி பெயரை சேர்க்க எங்கக் குடும்பத்தில் யாருக்குமே உடன்பாடில்லை.
பெயரை கேட்பவருக்கு நான் எங்கிருந்து வந்தேன் எனத் தெரியக்கூடாது என வைத்தப் பெயர்தான் மெனன். ஆனால், அனைவரும் அதை கேரளத்தில் உள்ள சாதியப் பெயரென (மேனன்) நினைத்துக்கொண்டார்கள். ‘நித்யா மேனன்'(nithya Menon)னு என்று யார் என்னை சொன்னாலும் அது என் பெயரில்லை, ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்றுதான் எனக்குத் தோணும்" என கூறினார்.